பெங்களூருவில் உள்ள 26 நட்சத்திர ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், சுகாதார விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெற்ற இந்த ஆய்வின்போது, மூன்று மற்றும் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல்களில் காலாவதியான பால் மற்றும் பேக்கரி பொருட்கள், பூஞ்சை படிந்த காய்கறிகள் மற்றும் இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தி ரேடிசன் புளூ ஹோட்டலில் 105 கிலோ காலாவதியான பொருட்களும், தி லலித் அசோக் ஹோட்டலில் 76 கிலோ இறைச்சியும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. மேலும், ஷாங்க்ரி-லா பெங்களூரு, ஃபோர் சீசன்ஸ், விவாந்தா பெங்களூரு ஒயிட்ஃபீல்ட் மற்றும் தாஜ் யஷ்வந்த்பூர் ஆகிய ஹோட்டல்களிலும் முறையற்ற சேமிப்பு மற்றும் லேபிளிங் நடைமுறைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில், ஆய்வகப் பரிசோதனைக்காக 35 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு முறையான நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆய்வக முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்





