ஹிமாசல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில், திஸ்ஸா-பைராகர் சாலையில் இன்று காலை தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பயணிகள் உயிரிழந்தனர். சலுன்ஜ் மோர் பகுதியில் காலை 7.15 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், 18 பயணிகளுடன் சென்ற பேருந்து மலைப்பாதையில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் காயமடைந்த 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் படுகாயமடைந்த 6 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



