தமிழகத்தின் ஓசூரையும், கர்நாடகாவின் பொம்மசந்திராவையும் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை எல்லை தாண்டிய பொதுப் போக்குவரத்து வசதியாக மாற்ற, கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தேசிய நெடுஞ்சாலை 44-ல் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கவும் இந்தத் திட்டம் உதவும் என உள்ளூர் ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஓசூர் தொழில்பேட்டை மற்றும் பெங்களூரு தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு இது ஒரு நம்பகமான பயண மாற்றாக அமையும். இது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை என ஓசூர் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



