இந்திய நுகர்வோருக்கு UPI பரிவர்த்தனைகள் எப்போதும் முற்றிலும் இலவசமாகவே தொடரும் என PhonePe நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சமீர் நிகாம் தெரிவித்துள்ளார். UPI மூலம் பணம் செலுத்துவதற்கு நுகர்வோரிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது என அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
ஒன்றிய அரசு நிறைவேற்றிய புதிய வரி திருத்த மசோதாவால் UPI பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்ற தகவல் பரவி வந்த நிலையில், இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




