வெளிநாட்டிலிருந்து பெறப்படும் நிதி, அதன் ஆதாரம் மற்றும் செலவிடப்படும் விதம் ஆகியவற்றை முறைப்படுத்தவே வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் (FCRA) திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேர்மையாகச் செயல்படும் எந்தவொரு தொண்டு நிறுவனத்திற்கும் இந்தச் சட்டத்திருத்தத்தால் பாதிப்பு ஏற்படாது என அரசு உறுதியளித்துள்ளது.
இதனிடையே, சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் கணக்கு வழக்குகளைத் தாக்கல் செய்ய வலியுறுத்தும் இந்தச் சட்டத்திருத்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

