புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அதிமுக முன்னாள் கிளைச் செயலாளருமான நாகராஜ் மர்ம நபர்களால் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நிலத் தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் இலுப்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


