கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன 260 செல்போன்களை காவல்துறையினர் கண்டறிந்து மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், செல்போன்கள் தொலைந்து போனால் பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை எனக் குறிப்பிட்டார். உரிய நடைமுறைகளைப் பின்பற்றி புகார் அளித்தால், தொலைந்த செல்போன்களை காவல்துறையினரால் மீட்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

