தமது பேச்சைச் சிலர் கேலி செய்வதாக அமைச்சர் மரிய வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். உருவ கேலி மற்றும் பெண்கள் குறித்த கேலிகளைத் தொடர்ந்து, தற்போது மொழி குறித்தும் கேலி செய்யப்படுவது வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவம் தனக்கு அன்பு, அமைதி மற்றும் இரக்கத்தையே கற்றுக்கொடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், தான் இயல்பாகவே பேசுவதாகவும், அதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.


