மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுப் பிரிவில் விழுப்புரத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுப் பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தினேஷ் முதலிடம் பெற்றுள்ளார்.


