சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 2,400 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை மாற்றத்தைத் தொடர்ந்து, ஒரு சவரன் தங்கம் 1,14,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 14,250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் உயர்ந்து, 260 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
