பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள 9,121 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பணியிடங்களில், தமிழ்நாட்டிற்கு மட்டும் 1,516 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் SBI.BANK.IN/WEB/CAREERS/CURRENT-OPENINGS என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி, வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


