ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் கொல்லம் இடையே சிறப்பு ரயில் சேவை இன்று தொடங்குகிறது. சென்னையில் இருந்து புதன்கிழமைகளில் மதியம் 3.10 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
இந்த சேவை செப்டம்பர் 2-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து வியாழக்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த சேவை ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை இயக்கப்படும்.


