சென்னையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இத்தகைய வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறைவாக வரி செலுத்தியவர்களின் சொத்து மதிப்பு மட்டும் தரவுகளின் அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், பொதுமக்கள் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மண்டல துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம். இதற்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் சமீர் தெரிவித்துள்ளார்.




