கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மூன்று கொடூர கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஆகஸ்ட் 3-ம் தேதி பீளமேடு பகுதியில் நவீன் (25) என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து ஆகஸ்ட் 6-ம் தேதி கிணத்துக்கடவு பகுதியில் அஸ்வின் (22) என்பவர் கத்தி மற்றும் சுத்தியலால் தாக்கி கொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10-ம் தேதி ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் அமுதன் (19) என்ற கல்லூரி மாணவர் 20-க்கும் மேற்பட்ட நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.




