கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, 100 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகக் குறுகிய காலத்தில் இத்தனை பயனர்களைச் சென்றடைந்த தயாரிப்பாக ஜெமினி உருவெடுத்துள்ளது. ஐஓஎஸ் (iOS) தளத்தில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
பயனர்களின் செயல்பாடுகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, சுமார் 63 சதவீதத்தினர் தட்டச்சு செய்வதற்குப் பதிலாகக் குரல் வழியாகவே ஜெமினியிடம் உரையாட விரும்புகின்றனர். ஜெமினி லைவ் பயன்படுத்துபவர்களில் 20 சதவீதம் பேர் கேமரா அல்லது திரைப்பகிர்வு மூலம் நிகழ்நேர உதவிகளைப் பெறுகின்றனர். மேலும், ஆண்ட்ராய்டு சாதனங்களில் 40-க்கும் மேற்பட்ட பிரபலமான செயலிகளின் பணிகளைத் தானியங்கியாகச் செய்யவும், தினமும் 15 கோடிக்கும் அதிகமான படங்களை உருவாக்கவும் ஜெமினி உதவுகிறது.


