இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையில், கூகுள் ஏஐ பிளஸ் (Google AI Plus) சேவையை இலவசமாக வழங்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு வருட காலத்திற்கு இந்தச் சேவையை மாணவர்கள் இலவசமாகப் பெற முடியும்.
பொதுவாக ரூ.4,000 மதிப்புள்ள இந்தச் சேவையை, கல்லூரி மாணவர்கள் மட்டும் கட்டணமின்றிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


