2035-ஆம் ஆண்டிற்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். இதற்காக முன்மொழியப்பட்டுள்ள பாரதிய விண்வெளி நிலையத்தின் (Bharatiya Antariksha Station) முதல் பகுதிக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் பல்வேறு விண்வெளித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ பணியாற்றி வருவதோடு, பாரதிய விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

