முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் மிகப்பெரிய விமானமான ‘எக்ஸ்1-ஐ’ (Heart X1) வெற்றிகரமாகப் பறக்கவிட்டு அமெரிக்காவின் ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. நியூயார்க் விமான நிலையத்தில் இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சோதனையின்போது, இந்த விமானம் 1,100 அடி உயரம் வரை பறந்து, 27 நிமிடங்கள் வானில் நிலைநிறுத்தப்பட்டு வெற்றிகரமாகத் தரையிறங்கியது.


