ஹார்முஸ் நீரிணை முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இப்பகுதியில் அமெரிக்க கடற்படையின் இருப்பை, ஈரான் எதிர்கொள்ள முடியாத ஒரு 'எஃகு சுவர்' என்று அவர் வர்ணித்தார். ஈரான் தற்போதைய நிலையில் வலுவான கடற்படையையோ அல்லது விமானப்படையையோ கொண்டிருக்கவில்லை என்றும், அந்நாட்டின் ராணுவமும் தலைமையும் பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாகக் கூறிய டிரம்ப், அங்கு பணவீக்கம் 300 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.


