இந்தியாவில் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகளின் பயன்பாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, 2021-22 நிதியாண்டில் 4,595.61 கோடி ரூபாயாக இருந்த பரிவர்த்தனை மதிப்பு, அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து உயர்ந்துள்ளது.
தொடர்ந்து 2022-23 நிதியாண்டில் 8,371.44 கோடி ரூபாயாகவும், 2023-24 நிதியாண்டில் 13,112.95 கோடி ரூபாயாகவும் அதிகரித்தது. கடந்த 2024-25 நிதியாண்டில் 18,586.60 கோடி ரூபாயாக உயர்ந்த இந்த பரிவர்த்தனை மதிப்பு, 2025-26 நிதியாண்டில் 24,161.69 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.





