நைஜீரியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில், தமிழ்நாட்டின் வாழப்பாடியைச் சேர்ந்த கனக லட்சுமி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்தத் தொடரில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 13 தங்கம், 8 வெள்ளி மற்றும் 14 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களைக் கைப்பற்றி முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.



