இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. கொழும்புவில் இன்று தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் களமிறங்கியுள்ளனர்.
ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்தத் தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், தொடரை சமன் செய்யும் நோக்கில் இலங்கை அணியும் இந்தப் போட்டியில் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில் கேப்டனாகவும், இலங்கை அணியில் தனஞ்ஜெய டி சில்வா கேப்டனாகவும் செயல்படுகின்றனர். இரு அணிகளும் தலா 11 வீரர்களுடன் களமிறங்கி விளையாடி வருகின்றன.



