இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 462 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களையும் எடுத்தது.
வெற்றிக்காக 372 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி, போட்டியின் கடைசி நாளில் 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.



