பிடபிள்யூஎஃப் (BWF) உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஒற்றையர் பிரிவில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் லானியர் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தத் தொடரில் பட்டம் வெல்லும் முதல் பிரெஞ்சு வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் ஜப்பானின் கோடாய் நாரோகாவை எதிர்கொண்ட லானியர், ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். நேர் செட் கணக்குகளில் 21-11, 21-11 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, லானியர் தனது முதல் உலக சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார்.



