ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. டர்வின் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியை வங்கதேச பந்துவீச்சாளர்கள் 198 ரன்களுக்குச் சுருட்டினர்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம், சிறப்பாக விளையாடி 426 ரன்களைக் குவித்தது. தற்போது ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.




