வளர்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களைப் புனரமைக்கும் பணிகள் நாளை தொடங்குகின்றன. இதற்காக சென்னை நீங்கலாக உள்ள 37 மாவட்டங்களுக்கு மொத்தம் 507.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 10,185 கால்வாய்களும், 809 ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகளும் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட உள்ளன. நீர்நிலைகளைப் பாதுகாத்து, நீர் சேமிப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நிதி ஒதுக்கீட்டில் தஞ்சாவூர் மாவட்டம் அதிகபட்சமாக 116.38 கோடி ரூபாயைப் பெறுகிறது. மேலும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு 32.69 கோடி ரூபாயும், விழுப்புரம் மாவட்டத்திற்கு 30 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F16%2Fvpgramg-2026-08-16-13-08-42.jpg&w=3840&q=75)
