டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையினால் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இந்த பாதிப்பால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.


