கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீட்டை கர்நாடக முதலமைச்சர் பெற்றுத் தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருவதால், இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


