கர்நாடக மாநிலம் ஹனூரில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உறுதியை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மைசூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்தவர்களின் உடல்களைப் பெற்றுக்கொள்ள குடும்பத்தினரும் கிராம மக்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

