சுதந்திர தின விழாவில் ஊழலை ஒழிப்போம் என முதலமைச்சர் பேசியிருந்த நிலையில், அதற்கு கடிவாளம் போட வேண்டும் என வீ த லீடர்ஸ் நிறுவனத்தின் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை எடுக்காமல் ஆய்வுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக்கொண்டார். இல்லையெனில், அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இந்த விவகாரத்தில் அக்கறை குறைந்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

