சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியில், குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாகக் கலப்பதால் ஏரி நீர் கடுமையாக மாசடைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஏரியின் நீர்நிலையைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் தேவை என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

