கால்பந்து விளையாட்டிலிருந்து விரைவில் ஓய்வு பெறக்கூடும் என நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இதுவே தனது கால்பந்து வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வோக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார். தான் விளையாட்டில் ஒரு மகத்தான பாரம்பரியத்தை விட்டுச் செல்ல விரும்புவதாகவும் அவர் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.



