ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவிடம் 3-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இந்தத் தோல்வியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை இந்தியா நழுவவிட்டுள்ளது.
தொடரிலிருந்து வெளியேறியுள்ள இந்திய அணி, இனி 7-வது மற்றும் 8-வது இடங்களுக்கான வகைப்பாட்டுப் போட்டிகளில் விளையாட உள்ளது.




