வளைகுடா நாடுகளில் தனது ராணுவ இருப்பைக் குறைப்பது குறித்து அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஈரானுடனான போர் முடிவுக்கு வந்ததையடுத்து, இப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் அளவைக் குறைப்பது குறித்து பென்டகன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
போரினால் சேதமடைந்த ராணுவத் தளங்களை மீண்டும் கட்டியெழுப்புவதா அல்லது வேண்டாமா என்பது குறித்தும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.


