இடதுசாரி அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மாணவர்கள் இத்தகைய போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மிருதுளா கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்குவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நடைமுறை என அவர் விமர்சித்துள்ளார்.

