தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 38 ரூபாயிலிருந்து 44 ரூபாயாக உயர்த்துவதாக அறிவித்திருந்தது. ஆனால், தற்போது கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாயாக உயர்த்தப்பட்டு, 41 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், கால்நடை மற்றும் பால் பொருட்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இரண்டு லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அவர்களுக்குக் கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


