ஈரோட்டில் நடிகர் விக்ரம் லார் கிப்பான் குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, அங்குள்ள கேசவநாதன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட 11 வெளிநாட்டு விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்டவற்றில் 2 லார் கிப்பான் குரங்குகள், 7 ஆப்பிரிக்கப் பூனைகள் மற்றும் 2 டஃப்டெட் கபுச்சி குரங்குகள் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் அனைத்தும் அதே இடத்தில் வனத்துறையினரின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

