சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ உடுமலை ஜெயக்குமார் தன்னை அடிக்கப் பாய்வது போல் வருவதாகவும், கையை ஓங்கி மிரட்டுவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார். தவெக அமைச்சர்களை திமுக எம்எல்ஏக்கள் ஒருமையில் பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எங்களை கட்டுப்படுத்த முதலமைச்சர் விஜய்யின் ஒரு பார்வையே போதுமானது என்று தெரிவித்த அமைச்சர் ராஜ்மோகன், திமுக எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த விவகாரம் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

