தற்போதைய அரசின் 100 நாள் ஆட்சியில் 6 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இது அரசின் கொடுங்கோன்மைக்குச் சான்றாக உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
மதுரையில் காவல்துறை விசாரணையின்போது தாக்கப்பட்டதில் பரமசிவம் என்பவர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காவல் மரணங்கள் தொடர்வதைத் தடுக்க, உயிரிழந்த பரமசிவம் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

