தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களான நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ரோப் கார் வசதி அமைக்கப்பட உள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் அறிவித்துள்ளார்.


