சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,560 ரூபாய் உயர்ந்து, 1,15,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 195 ரூபாய் அதிகரித்து 14,400 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, காலை நேரத்தில் ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், மாலை நேர நிலவரப்படி அதில் எவ்வித மாற்றமும் இல்லை.

