என்.எல்.சி நிறுவனம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள புகார்களை விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், என்.எல்.சி நிர்வாகத்தின் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கீர்த்தனா சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழலில், முதலமைச்சர் எப்போதும் விவசாயிகளின் பக்கமே நிற்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.


