நெல்லை போக்சோ நீதிமன்றம், சிறுமிகளை வன்கொடுமை செய்த வழக்கில் மத போதகர் ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு சிறுமிகளை வன்கொடுமை செய்ததாக இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

