அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிதியமைச்சர் மரியவில்சன் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் கார் வழங்குவது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கார் வசதி இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு கார் வழங்கினால் அதில் நியாயம் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் தேவைப்பட்டால், அதை அந்தந்த உறுப்பினர்களின் சொந்த செலவிலோ அல்லது அவர்களின் கட்சி செலவிலோ வாங்கிக்கொள்ள வேண்டும். மக்கள் பணத்தை இதற்குப் பயன்படுத்துவது தேவையற்றது என சீமான் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

