தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்பதற்கான சட்டப்பூர்வ உறுதிமொழியை மத்திய அரசு வழங்க வேண்டும் என முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்கள்தொகையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததற்காகத் தென் மாநிலங்கள் தங்களின் பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார். எந்தவொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

