ஆகஸ்ட் 20, 2026 அன்று நடைபெற்ற 31-வது தென்மண்டல முதலமைச்சர் மாநாட்டில்,
• தொகுதி மறுவரையறையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய கூடாது
• முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்
• காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும், மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும்
• நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்
• போதை பொருட்களை தடுக்க மாநிலங்களுக்கு இடையே கூட்டமைப்பு தேவை
• மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும்
• பெங்களூரு மெட்ரோவை ஒசூர் வரை நீட்டிக்க வேண்டும்
• மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த தமிழ்நாட்டை அனுமதிக்க வேண்டும்
• ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும்
• கடல்சார் பொருளாதாரத்திற்கு புதிய திட்டமிடல் அவசியமாகிறது
• தென்மாநிலங்களுக்கு நிதி செலவீன சுயாட்சி அதிகாரம் தேவை

