தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், நீர் பங்கீடு என்ற நிலையிலிருந்து நீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
கர்நாடகா பிற மாநிலங்களின் உரிமைகளை மதித்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், சமத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவையே கர்நாடகாவின் கொள்கைகள் என வலியுறுத்தினார்.

