கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட கோபி என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சையின் போது நோயாளி உயிரிழந்ததையடுத்து, மருத்துவமனையை மூடிவிட்டு மருத்துவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


