தமிழகத்தில் 100 நியாயவிலைக் கடைகளை பல்நோக்கு சில்லறை விற்பனை நிலையங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 7.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் காந்திராஜ் அறிவித்தார்.
இந்த பல்நோக்கு விற்பனை நிலையங்களில் ஆவின் பால் பொருட்கள், மருந்தகம், இ-சேவை மையம் (CSC) மற்றும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடை (FFCO) உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஒரே இடத்தில் பொதுமக்களுக்குக் கிடைக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.


