பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டே மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்படுவதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். தென்னிந்திய மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேகதாது அணையிலிருந்து பெங்களூரு குடிநீர் தேவைக்காக 5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே எடுக்கப்படும் என்றும், எஞ்சிய நீர் தமிழகத்திற்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

